PS/SB/Circular/2/2025 இலக்க சுற்றறிக்கைக்கு அமைவாக, மாவட்ட நிர்வாகம் முழுவதும் நன்னெறி ஆளுகை, ஊழல் அபாயக் குறைப்பு மற்றும் தகவல் அளிப்போர் பாதுகாப்பை உள்நாட்டு அலுவல்கள் பிரிவு உறுதி செய்கிறது.
ஊழல் எதிர்ப்பு கட்டமைப்பு
CIABOC
ஆணை
சுற்றறிக்கை PS/SB/2/2025
நடத்தை நெறிமுறைகள்
மும்மொழி (ஆங்/சிங்/தமிழ்)
உள்நாட்டு அலுவல்கள் பிரிவின் முக்கிய நேர்மை மற்றும் ஊழல் எதிர்ப்பு இலக்குகள்
நிறுவனத்தில் ஊழலைத் தடுத்தல் மற்றும் நேர்மை மற்றும் ஒழுக்கக் கலாச்சாரத்தை உருவாக்குதல்.
நிறுவனத்தின் அனைத்து செயற்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துதல் மற்றும் தகவல்களுக்கான பொது அணுகலை உறுதி செய்தல்.
நிறுவனத்திற்குள் நன்னெறி ஆளுகையை ஊக்குவித்தல்.
முறைகேடுகளைப் புகாரளிப்பதை ஊக்குவிப்பதற்கும், தகவல் அளிப்போரைப் பாதுகாப்பதற்கும் மற்றும் இரகசியத்தன்மையைப் பேணுவதற்கும் பாதுகாப்பான மற்றும் அணுகக்கூடிய அமைப்பை உருவாக்குதல்.
சட்ட அமுலாக்கல் முகவர் நிலையங்கள் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுடன் (CIABOC) இணைந்து சட்ட அமுலாக்கத்திற்கு ஆதரவளித்தல்.